விஜய் அரசியலில் இறங்கப்போவதால் இறுதியாக ஒரு படத்தில் நடிக்க இந்தியத் திரையுலகில் யாருமே வாங்காத அளவிற்கு சம்பளம் பெற இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படத்தை இயக்கப் போகிறவர் எனப் பலரது பெயர்கள் அடிபடுகின்றன. அதில் வெற்றிமாறன், எச்.வினோத் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தயாரித்த ‘டிவிவி என்டர்டெயின்மெண்ட்’, ‘டிடிவி தனய்யா’ விஜய்யின் கடைசிப் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.150 கோடி சம்பளம் பெற்று வருகிறார். ‘கோட்’ படத்தில் சம்பளம் ரூ.200 கோடியாக உயர்ந்திருக்கிறது. அவரது கடைசிப் படத்துக்கு ரூ.250 கோடி சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது உண்மையானால், இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமை விஜய்யைச் சேரும். நடிகர் மட்டுமின்றி இயக்குநர் உட்பட எந்த இந்தியத் திரையுலகப் பிரபலமும் சம்பளமாக ரூ.250 கோடி பெற்றதில்லை. இது நடந்தால் மிகப் பெரிய சாதனை எனக் கருதப்படும்.