தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

1 mins read
acc68878-6742-4d65-ae35-6df8f6fd98bb
சூர்யா. - படம்: ஊடகம்

சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் வன்முறைக் காட்சிகள் காரணமாக அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படத்தில் காவல் நிலையத்தின் வன்முறைக் காட்சிகள் காரணமாக அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் கங்குவாவுக்கு நிச்சயம் ‘ஏ’ சான்றிதழ் கிடைப்பது உறுதி என்கிறது கோலிவுட். ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

திரையரங்கு வெளியீட்டுக்கு பின்பு வரும் கங்குவாவின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்