தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ல் ருக்மிணி வசந்த்

1 mins read
c22034db-cd08-431f-8b95-8d3ca1a98012
ருக்மணி வசந்த். - படம்: ஊடகம்

காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இதன் இரண்டாம் பாகத்திற்கு ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கன்னட நடிகையான இவர் தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்