அனுஷ்கா நடிக்கும் புதிய படம்; அறிவிப்பு வெளியானது

அனுஷ்கா நடிக்கும் புதிய படம்; அறிவிப்பு வெளியானது

1 mins read
3054861a-0402-4e1d-8635-adc1dc92a638
அனுஷ்கா. - படம்: ஊடகம்

அனுஷ்கா நடிக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘காட்டி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் கதையை மூன்று பேர் இணைந்து எழுதியுள்ளனர். கிரிஷ் இயக்குகிறார்.

பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருவதாகத் தகவல்.

ஓர் அப்பாவி இளைஞன் குற்றவாளியாக மாறிப்போகிறான். பின்னர், பல சவால்களை எதிர்கொள்ளும் அவன் மதிப்புக்குரிய பிரமுகராக மாறுவதுதான் படத்தின் கதை.

படக்குழுவினர் தற்போது இப்படத்தின் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். அதில் தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா.

இப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் தயாராகிறது.

இதையடுத்து அனுஷ்காவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்