மீண்டும் உலகப் பயணத்தைத் தொடங்கிய அஜித்

1 mins read
f9a86e7c-d068-4725-9876-783e579a5f00
அஜித். - படம்: ஊடகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித், நலமாக வீடு திரும்பியது ரசிகர்களுக்குத் தெரியும்.

இதையடுத்து, மீண்டும் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அஜித் மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் பயணம் கிளம்பிவிட்டார்.

இம்முறை சுற்றுப்பயணத்தில் நடிகர் ஆரவ்வும் பங்கேற்றுள்ளாராம்.

‘துணிவு’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். பின்னர் ‘விடாமுயற்சி’ படம் துவங்க தாமதமான போதும் சுற்றுப் பயணத்தை நீட்டித்தார்.

மூன்றாவது முறையாக பயணம் கிளம்பியுள்ள அவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்