தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மிர்னா

தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மிர்னா

1 mins read
4edfb617-e3d5-4571-8a6a-9e59e70e740b
மிர்னா. - படம்: ஊடகம்

தாம் நடித்து வரும் புதுப் படத்துக்காக ‘பார்கோர்’ (Parkour) என்ற சண்டைக் கலையில் பயிற்சி மேற்கொண்டுள்ளார் மிர்னா மேனன்.

திரையுலகில் அறிமுகமான புதிதில் அதிதி மேனன் என்ற பெயரில் நடித்து வந்த இவர், தனது ராசி கருதி பெயரை மிர்னா என மாற்றி உள்ளார்.

அவ்வப்போது சில காணொளிகளை இன்ஸ்டகிராமில் வெளியிடுவது இவரது வழக்கம். இந்நிலையில், ‘பார்கோர்’ பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார் மிர்னா.

ஓடுவதும் குதிப்பதும் தலைகீழாக சுழலுவதுமாக அவரது ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை வெகுவாகப் பாராட்ட வைத்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் மிர்னா. தற்போது மலையாளம், தெலுங்கு மொழிகளில் அதிகம் நடித்து வருகிறார்.

எனினும் தமிழ்த் திரையுலகில் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறினார். கடந்த 2016ஆம் ஆண்டு ‘பட்டதாரி’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார் மிர்னா. பின்னர் ‘களவாணி மாப்பிள்ளை’, ‘புர்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். எனினும் தாம் எதிர்பார்த்த பாத்திரங்கள் கிடைக்கவில்லை என்கிறார் மிர்னா.

குறிப்புச் சொற்கள்