மணிரத்னம் படத்தில் கமலுக்கு மூன்று மாறுபட்ட தோற்றங்கள்

மணிரத்னம் படத்தில் கமலுக்கு மூன்று மாறுபட்ட தோற்றங்கள்

1 mins read
913eff33-7ecd-4216-b4e9-19f173beb1ac
‘தக் லைஃப்’ படத்தில் கமல். - படம்: ஊடகம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் நாயகன் கமல்ஹாசன் மூன்று மாறுபட்ட தோற்றங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி, திரிஷா, கவுதம் கார்த்திக், ஜஸ்வர்யா லட்சுமி எனப் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இரு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

சில முக்கியமான காட்சிகளை செர்பிய நாட்டில் படமாக்கி உள்ளனர். மூன்று தோற்றங்களில் நடிக்கும் கமல்ஹாசன், சண்டைக் காட்சிகளில் மிரள வைக்கும் வகையில் நடித்துள்ளாராம்.

இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக மீண்டும் வெளிநாட்டுக்கு இப்படக் குழுவினர் செல்ல இருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்