தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயின் லட்சியத்தை நிறைவேற்ற போராடும் மகன்

1 mins read
50a66da1-9339-4b8c-90d0-e4418447b9df
‘ஆலகாலம்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆலகாலம்’. ஏப்ரல் தொடக்கத்தில் வெளியீடு காண உள்ளது.

ஒரு தாயின் லட்சியத்தை நிறைவேற்ற மகன் மேற்கொள்ளும் முயற்சிகள், அவனது காதலியின் நம்பிக்கை ஆகியவை வெற்றி பெற்றனவா என்பதுதான் கதையாம்.

“ஆலகாலம் என்பது கொடிய நஞ்சு. வஞ்சம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை நிறைந்த உலகத்தில் பல்வேறு கொடிய நஞ்சுகளும் உள்ளன.

“இந்த உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அத்தகைய நச்சுகள் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையை நரகமாக்கி விடுகின்றன. இத்தகைய சூழலில் லட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், நம்பிக்கையுடன் கரம்கோக்கும் காதலி, இவர்களின் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி என எல்லாம் விரிவாக அலசப்பட்டுள்ளன.

“இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் ஜெயகிருஷ்ணா.

குறிப்புச் சொற்கள்