தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகங்களில் வெளியான படங்கள்; இளையராஜா வேடத்துக்குத் தயாராகும் தனுஷ்

1 mins read
863694b9-92f9-4529-a4ac-847cede6b88e
இளையராஜா போல் காட்சி அளிக்கும் தனுஷ். - படம்: ஊடகம்

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பது அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஷ்வரன்தான் ‘இளையராஜா’ படத்தை இயக்குகிறார்.

அவரால் இப்படத்தைக் கச்சிதமாக இயக்க முடியுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் இவர் ஏற்கெனவே இயக்கி உள்ள ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய மூன்று படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்தன.

எனவே வன்முறைக்குச் சற்றும் இடம் இல்லாத இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அருணால் கச்சிதமாக இயக்க முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநரை மாற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் அண்மையில் இளையராஜாவை நேரில் சந்தித்துlg பேசியுள்ளார் அருண் மாதேஷ்வரன். அதன் பின்னர் அருணை இயக்குநராக ஒப்பந்தம் செய்ய அவர் இசைவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ், இளம் வயது இளையராஜாவாகத் தோன்றும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவற்றுள் மிக இளம் வயதில் தனது இசைக்குழுவினரை ஒலிப்பதிவு கூடத்தில் கைகளை அசைத்து இளையராஜா ஒருங்கிணைப்பு செய்யும் படமும் இடம் பெற்றுள்ளது. இப்புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனுஷ் ரசிகர்கள் உருவாக்கியவை.

எனினும் இளையராஜா வேடத்துக்கு தனுஷ்தான் பொருத்தமாக இருப்பார் என்பதை இந்தப் படங்கள் உறுதி செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்