தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சல்மான்கானை இயக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

1 mins read
0911d5e0-13ed-4c52-acc5-527e835b0f9b
சல்மான்கான், ஏ.ஆர்.முருகதாஸ். - படம்: ஊடகம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி இந்தியில் ‘கஜினி’, ‘ஹாலிடே’ உள்ளிட்ட சில வெற்றிப் படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என அண்மையில் அறிவித்தனர். இதன் பட்ஜெட் ரூ.400 கோடி. இதன் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்