தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இசைப்புயலுடன் இணையும் நடனப்புயல்

1 mins read
68e4d9c0-1d4d-4d58-ada3-7a7ed50c8278
நடனப் புயல் பிரபு தேவா, இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நடனப்புயல் பிரபு தேவா நடிக்க இருக்கிறார்.

பிரபல நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிக்க இருக்கிறார். புதிய படத்தை முதன் முதலாக ‘பிகைண்ட்வுட்ஸ்’ சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்தத் திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. நகைச்சுவை நடிகர் யோகி பாபு இதில் வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ‘மே’ மாதம் தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்