தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘முதல் பாகத்தில் மறுப்பு; இரண்டாம் பாகத்தில் அழைப்பு’

1 mins read
08034f32-cb3d-4c8b-9ae4-4175a64df30d
நடிகர் சமுத்திரகனி. - படம்: ஊடகம்

நடிகர் சமுத்திரகனி ‘இந்தியன்’ல மறுக்கப்பட்டேன். `இந்தியன் 2’வில் முக்கியமான கதாபாத்திரத்திற்காக அழைக்கப்பட்டேன்,” என்று கூறியுள்ளார்.

‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பது பற்றி நடிகர் சமுத்திரகனி பேசுகையில், ``மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கேம் சேஞ்சர்’, `இந்தியன் 2’ படங்களுக்கான வேலைகள் மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

“இயக்குநர் சங்கர் இரண்டு படங்களையும் பிரமாதமாக அவருடைய பாணியில் எடுத்துக்கொண்டு இருக்கிறார். `இந்தியன் 2’ பத்தி சின்ன மறக்க முடியாத கதை ஒன்று இருக்கிறது.

“நான் `இந்தியன்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, சிறிய வேடத்தில் நடிக்க படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன். அப்போது, அந்தக் கூட்டத்திற்குள் என் பெயரைக்கூட எழுத மறுத்து அனுப்பிவிட்டார்கள்.

“இன்றைக்கு அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கமலை வைத்து இயக்குநர் சங்கர் இயக்குகிறார். அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் சங்கர் என்னிடம், ‘இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று முடிவு செய்து உங்கள் பெயரை முன்பே எழுதிவிட்டேன்,” என்று சொன்னார்.

“இந்தியன்’ல மறுக்கப்பட்டேன். `இந்தியன் 2’வில் முக்கியமான கதாபாத்திரம் என்று என்னை அழைத்தார்கள்,” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்