‘காதலித்து திருமணம் செய்ய விருப்பம்’

‘காதலித்து திருமணம் செய்ய விருப்பம்’

1 mins read
081019e7-c6a3-4061-817f-a705deeef052
கங்கனா ரனாவத். - படம்: ஊடகம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் காதலித்து திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமையும். அண்மையில் அம்பானி இல்லத் திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டன. அந்த வரிசையில், குடும்ப உறவு மற்றும் திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளனர். அப்படித்தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் குடும்பத்துடன்தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்