சாதனை படைத்து வரும் ‘ஹனுமான்’

சாதனை படைத்து வரும் ‘ஹனுமான்’

1 mins read
6ab635bc-2d6e-4deb-9e0f-784d73c8c3da
‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா. - படம்: ஊடகம்

200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது ‘ஹனுமான்’ படம்.

தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஹனுமான்’. இப்படம் ஓடிடியில் வெளியான ஒரே நாளில் 100 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தற்போது 200 மில்லியன் பார்வைகளை ஐந்து நாள்களில் கடந்துள்ளது.

ஓடிடி தளத்தில் தெலுங்கில் மட்டும்தான் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமான பார்வைகளை ஓடிடி தளத்தில் பெற்றிருக்கலாம்.

சில தின இடைவெளியில் ஒவ்வொரு மொழியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மற்ற மொழிகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்