இவானாவை திட்டிவிட்டு பிறகு வருத்தப்பட்டேன்: பாரதிராஜா

இவானாவை திட்டிவிட்டு பிறகு வருத்தப்பட்டேன்: பாரதிராஜா

1 mins read
90341f76-7e47-4af2-8760-0bec7672217b
இவானா. - படம்:ஊடகம்

ஜி.வி.பிரகாஷும் இளம் நாயகி இவானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘கள்வன்’.

இதன் படப்பிடிப்பின்போது இவானாவிடம் தாம் கோபப்பட்டதாகக் கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்தப் படத்தில் அவரும் முக்கியமான வேடத்தை ஏற்றுள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டின்போது பேசிய அவர், “இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். பிறகு அதற்காக வருத்தப்பட்டேன். அவர் திறமையான நடிகை. அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது,” என்றார்.

இதையடுத்து பேசிய இவானா, “பாரதிராஜாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. அது எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

“அவர் என்னைக் கடிந்துகொள்ளவில்லை. அவரது வார்த்தைகளை நல்ல அறிவுரைகளாகக் கருதுகிறேன்,” என்றார் இவானா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்