சிவாவுக்கு நடனம் கற்றுக்கொடுத்த ஸ்ரீ லீலா

1 mins read
7ec60146-d178-4fa2-ba24-e6b36d9b04e0
ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பரவி வருகின்றன.

அந்தக் கலை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள், ‘குர்ச்சி மடத்தப்பெட்டி’ என்ற தெலுங்குப் பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி இருவரையும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு அப்பாடலுக்கான சில நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்தார் ஸ்ரீ லீலா.

அதன் பின்னர், இருவரும் இணைந்து அப்பாடலுக்காக சில வினாடிகள்

நடனம் ஆடினர். அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்