ரஜினிக்குப் பிறகுதான் கார்த்தி படம்: லோகேஷ் கனகராஜ்

ரஜினிக்குப் பிறகுதான் கார்த்தி படம்: லோகேஷ் கனகராஜ்

1 mins read
522f926d-4fbb-40cb-b2cf-ae258d7a469e
ரஜினியுடன் லோகேஷ். - படம்: ஊடகம்

கமல்ஹாசனும் அவரது மகள் ஷ்ருதியும் கேட்டுக்கொண்டதாலேயே ‘இனிமேல்’ இசைத்தொகுப்பில் நடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் முதல், ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாக சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் படத்தை முடித்த பிறகே ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன். ரஜினி படத்துக்கான திரைக்கதையை எழுதி முடிக்க வேண்டும் என்பதால்தான் இடையில் சில மாதங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பதிவிடவில்லை,” என்று கூறியுள்ளார் லோகேஷ்.

ரஜினி குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். லோகேஷின் இப்பதிவின் மூலம், அவர் இயக்கும் ரஜினி படத்துக்கான திரைக்கதை தயாராகிவிட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்