படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா

1 mins read
8e40324c-39a7-4382-959b-76297ff0fc52
சமந்தா. - படம்: ஊடகம்

‘சிட்டாடல்’ என்ற தலைப்பில் உருவாகும் இணையத் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா.

இதற்கான சண்டைக் காட்சியில் நடித்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

“சண்டைக் காட்சிகளில் நடிப்பது உடல் ரீதியில் கடினமாக இருந்தது. எனினும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்தேன். ஆனால் ஒருநாள் திடீரென மயங்கி விழ நேர்ந்தது. அதன் பின்னர் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளைப் பின்பற்றி வருகிறேன்,” என்கிறார் சமந்தா.

‘சிட்டாடல்’ தொடரில் நடிக்கத் தொடங்கியபோது, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது சிகிச்சை எடுத்தபடியே இத்தொடரில் நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்