தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமல் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமான சிம்பு

1 mins read
ec3c4ef5-6bf8-4ebc-8f1c-5f0115e2ac0c
சிம்பு. - படம்: ஊடகம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் சிலர் ஒப்பந்தமாவதும் பிறகு விலகுவதுமாக உள்ளனர்.

அந்த வகையில் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகுவதாகக் கூறிவிட்டனர். இருவருக்குமே கால்ஷீட் பிரச்சினை உள்ளது.

இதையடுத்து, துல்கர் சல்மான் நடிக்க இருந்த வேடத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதன் முடிவில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஏற்கெனவே கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் அவரது 48வது படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கமல் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்