நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

1 mins read
cdf53339-43dd-4697-9ee3-b3b8d6b4b806
சேஷு. - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். அவருக்கு வயது 60.

அண்மையில் சேஷுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் குழுவில் தொடக்கம் முதல் இருந்து வந்தவர் சேஷு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சந்தானம் நடித்த திரைப்படங்களிலும் சேஷுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

சந்தானம் நடித்த ‘ஏ1’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் தேதி சேஷுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 26ஆம் தேதி காலமானார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்