வரிசையாக திகில், மர்மக் கதைகளில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘படிக்காத பக்கங்கள்’. செல்வம் மாதப்பன் இயக்கி உள்ளார்.
பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏற்காடு பகுதிக்குச் செல்லும் சுற்றுலா குழுவினர் அங்கு உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.
எனினும், அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் பிரபல நடிகை ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதன் பின்னணி என்ன, சுற்றுலா குழுவுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதுதான் படத்தின் கதையாம்.
தொடக்கம் முதல் இறுதிக்காட்சி வரை திரைக்கதை விறுவிறுப்பாக நகரும் என்றும் தனது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்துப் போகும் என்றும் சொல்கிறார் யாஷிகா.

