ரூ.100 கோடி செலவில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்

ரூ.100 கோடி செலவில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்

1 mins read
63dcbb0e-38e7-49ca-b32d-2a9d1d173241
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ரூ.100 கோடி செலவில் உருவாகிறது.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவா.

இதையடுத்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் புதுப்படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படம் ரூ.100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த அண்மைய சில படங்கள் உலக அளவில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்