அனுஷ்காவுக்காக நடிக்கும் பிரபுதேவா

அனுஷ்காவுக்காக நடிக்கும் பிரபுதேவா

1 mins read
9a205b44-e390-44cc-96f1-0d3304fc1d8c
அனுஷ்கா. - படம்: ஊடகம்

முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இப்படத்துக்கு ‘கதநர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜெயசூர்யா நாயகனாக நடிக்க, ‘கலியான் காட்டுநீலி’ என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அனுஷ்கா.

இந்தப் படத்தில் பிரபுதேவா கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

எனவே கால்ஷீட் ஒதுக்க இயலாது என்று கூறிவிட்ட நிலையில், அனுஷ்காவின் முதல் மலையாளப் படம் என்பதற்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதையடுத்து ரசிகர்கள் பலர் அனுஷ்காவுக்கு சமூக ஊடகங்களின் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்