தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவுக்குப் பதில் விஜய் சேதுபதி

1 mins read
1724cad0-d4ad-4163-b0a1-98c05bcb609e
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

சூர்யா நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ படம் விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் உருவாக்க இருந்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. எனினும் அவரது முயற்சி கைகூடவில்லை.

இந்நிலையில் ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் என்பவர் இயக்க, ‘மிர்ச்சி’ சிவா நாயகனாக நடித்திருந்தார். இப்போது மூன்றாம் பாகத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டுள்ளாராம்.

இரண்டாம் பாகத்துக்காக எழுதிய கதையைத்தான் அவர் மூன்றாம் பாகமாக இயக்க உள்ளார்.

அனேகமாக ‘தர்மம் வெல்லும்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்