பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

1 mins read
dbedad52-da32-4355-9822-5964df09ec6d
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய டேனியல் பாலாஜி. - படம்: இணையம்

சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மார்ச் 29ஆம் தேதி காலமானார். அவருக்கு 48 வயது. மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய டேனியல் பாலாஜி, பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

டேனியல் பாலாஜி தனக்கென ஒரு தனிப் பாதை, பாணியை அமைத்து தமிழ்த் திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக, கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘வேட்டையாடு விளையாடு’, சூர்யாவின் ‘காக்க காக்க’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக அசத்திய டேனியல் பாலாஜி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் தமிழ்த் திரையுலகையும் அவரது ரசிகர்களையும் மீளாத் துயரில், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்