இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர், அடுத்து ‘வைப்குமார்’ என்ற புதுப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். முன்னதாக, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், சிம்புவை வைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
எனினும் சில காரணங்களால் அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் அதே கதையில் சிம்புக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், தலைப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு அதிதி சங்கரும் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருவதால் உற்சாகத்தில் உள்ளாராம் அதிதி சங்கர்.

