தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சாமானியன்’ முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு

1 mins read
0f529fb1-b2a2-4fea-b834-37da40a5c618
ராமராஜன். - படம்: ஊடகம்

ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமானியன்’ படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தை ராகேஷ் இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிகுமார், ஸ்ம்ருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு 40 வயதைக்கடந்த ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு ‘மேதை’ என்ற படத்தில் நடித்திருந்தார் ராமராஜன். ‘சாமானியன்’ அவரது 45வது படமாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்