இந்திப் படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகச் சொல்கிறார் பிரியாமணி.
அண்மைய பேட்டியில், திரையுலகில் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு கூடாது என்றும் அனைவருமே இந்திய நடிகர்கள் என்ற உணர்வு வலுப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால்தான் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள்.
“விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன். நாங்களும் மற்றவர்களைப் போலவே அழகாகத்தான் இருக்கிறோம். தென்னிந்திய நடிகைகள் என்றாலும் இந்தியில் சரளமாகப் பேச முடியும்.
“பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் காட்சி அளிக்கவில்லை என்றாலும் நடிப்பில் குறை வைப்பதில்லை,” என்று பிரியாமணி மேலும் தெரிவித்துள்ளார்.

