33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாகும் ‘புதிய பாதை’

33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாகும் ‘புதிய பாதை’

1 mins read
2bd99ed5-dc37-4077-8fe5-f8860475ca6f
பார்த்திபன் நடித்த ‘புதிய பாதை’ படத்தின் வெளியீட்டையொட்டி வெளியிடப்பட்ட சுவரொட்டி. - படம்: ஊடகம்

தாம் நாயகனாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘புதிய பாதை’ படத்தை மறுபதிப்பு (ரீமேக்) செய்ய உள்ளார் பார்த்திபன்.

அண்மைக் காலமாக தமிழில் பெரிய வெற்றியைப் பதிவு செய்த பழைய திரைப்படங்களை மறு வெளியீடு (ரீ ரிலீஸ்), மறுபதிப்பு செய்யும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘அழகி’ திரைப்படம் மறு வெளியீடு கண்டுள்ளது. இதையடுத்து ‘புதிய பாதை’ படத்தை மறுவெளியீடாக அல்லாமல் மறுபதிப்பு செய்யப் போவதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக உள்ள இந்த மறுபதிப்புக்கு ‘டார்க் வெப்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இயக்கத்தில் ‘டீன்ஸ்’ என்ற படம் உருவாகி வருகிறது. அந்தப் படம் வெளியான பிறகு ‘ரீமேக்’ முயற்சியில் ஈடுபட உள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்