தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வில்லன் ரஜினியை எனக்குப் பிடிக்கும்: லோகேஷ் கனகராஜ்

1 mins read
d0e58c8c-611c-4913-898b-35b788920377
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகே‌‌ஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

ரஜினி வில்லனாக நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தார் இயக்குநர் லோகே‌‌ஷ் கனகராஜ். அதனால் ரஜினியை அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க வைப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படம் ரஜினிக்கு 171வது படமாகும். இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி வெளியான நிலையில் முன்னோட்டக் காட்சி ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் ‘டைம் டிராவல்’ சம்பந்தப்பட்ட கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பலரின் யூகங்களைத் தாண்டி வேறு மாதிரியான கதையில் இந்தப் படம் உருவாகிறது. ரஜினியை புதிய பரிமாணத்தில் காண்பிக்கப் போறேன் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தங்க கடத்தல் மன்னனாக ஓர் எதிர்மறையான வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே ரஜினி வில்லனாக நடித்த படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று லோகேஷ் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதோடு இந்தப் படத்திலும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ‘ரோலக்ஸ்’ போன்ற கதாபாத்திரம் இடம் பெறுவதாகவும் ஒரு முன்னணி நாயகன் அந்த வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி