அட்லி தெலுங்கில் இயக்க இருக்கும் படத்திற்கு போட்ட நிபந்தனையால் ஆடிப்போய் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
‘ஜவான்’ படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குநராக உயர்ந்துள்ளவர் தமிழ் இயக்குநரான அட்லி. அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது அல்லு அர்ஜுன். தெலுங்கில் தயாரித்து பான் இந்தியா படமாக அப்படத்தை வெளியிடப் பேசி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய நிபந்தனை ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பொதுவாக ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் சிலர்தான் இப்படி லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், ஓர் இயக்குநர் இப்படி கேட்பது தெலுங்குத் திரையுலகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்து பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்தால் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

