இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கமல் எழுதுவதாக இருந்தது. தற்பொழுது சில காரணங்களால் அந்தக் கதை எழுதும் பணி தனுஷிடம் சென்றிருக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் கமல்ஹாசனால் திரைக்கதை எழுத முடியவில்லை. அதனால் அந்த பொறுப்பு தற்பொழுது தனுஷிடம் சென்றிருக்கிறது.
இது உறுதியானால் தனுஷ், நடிகர், பாடகர், இயக்குநர், வசனகர்த்தா என்று மற்றொரு பட்டத்துடன் எட்டாத உயரத்தில் இருப்பார் என்கிறது கோலிவுட்.

