தொடர் படப்பிடிப்பினால் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணையத்தில் தங்களின் பிரிவு, ஏக்கத்தை அளிப்பதாக பதிவிட்டு இருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.
நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும் நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்து, “படப்பிடிப்புப் பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்,” என்று பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளிப்பது போல நயன்தாராவும், “தன் கணவருடனும் குழந்தைகளுடனும் இருக்கும் படங்களை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

