விஜய் தேவரகொண்டா: விரைவில் காதல் திருமணம் செய்வேன்

விஜய் தேவரகொண்டா: விரைவில் காதல் திருமணம் செய்வேன்

1 mins read
9a1232d4-9f10-4503-86d2-76304fc101b3
விஜய் தேவரகொண்டா, ரா‌‌ஷ்மிகா. - படம்: ஊடகம்

‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, விரைவில் காதல் திருமணம் செய்வேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விஜய் தேவரகொண்டா – மிருணால் தாகூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி படத்தின் விளம்பர வேலைகளில் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஏற்கெனவே ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா இணைத்து பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டி பல யூகங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி