சென்ற வாரத்தைப்போலவே இந்த வாரமும் ஏழு படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்த வாரம் வியாழனன்று ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘கள்வன்’, வெள்ளியன்று ‘டபுள் டக்கர்’, ‘இரவின் கண்கள்’, ‘கற்பு பூமியில்’, ‘ஒரு தவறு செய்தால்’, ‘வல்லவன் வகுத்ததடா’, ‘ஒயிட் ரோஸ்’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.
இதற்கிடையில் சென்ற வாரம் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒன்றுகூட திரையரங்கம் நிரம்பி வழியவில்லை என்றும் ஒரு சில படங்களின் காட்சிகள் மக்கள் வராததால் ரத்து செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணங்கள் ஐபிஎல், தேர்தல், தேர்வு ஆகியவற்றுடன் சேர்த்து வெயிலும் சேர்ந்துகொண்டது.
வெயில் அதிகம் என்பதால் மக்கள் பகலில் அதிகம் வெளியே வருவதைத் தவிர்க்கின்றனர். இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒவ்வொரு வாரமும் இத்தனை படங்கள் வெளியாகின்றன. இவற்றில் எது ஓடும் என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது.

