தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவகார்த்திகேயனுடன் மோதும் பிரபல வில்லன்

1 mins read
cabc471b-01a9-4260-a021-7ca429b3907c
வித்யுத் ஜம்வால், சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘SK-23’ என்ற சண்டைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கியது. சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடிக்கும் முதல் கட்டப் படப்பிடிப்பு முன்னதாகவே முடிவடைந்துள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் 2வது கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இணைந்து உள்ளார். சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டைக் காட்சி இந்தப் படத்தில் இடம்பெறுகிறது என்கின்றனர் படக்குழுவினர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்