கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?

1 mins read
cb0269ef-e05a-4dd7-b26f-f233f43fe4b0
சரண்யா பொன்வண்ணன். - படம்: ஊடகம்

தன்னுடைய காரை சேதப்படுத்தியதற்காக அண்டை வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கு சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வண்ணன் தன்னுடைய காரை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவியின் வீட்டு வாசலில் நேற்று மாலை நிறுத்தி இருந்திருக்கிறார்.

ஸ்ரீதேவி வெளியே செல்ல தனது காரை எடுப்பதற்காக வீட்டின் இரும்பு கேட்டை திறந்தார். இதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் காரில் இரும்பு கேட் உரசியது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சரண்யா ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்