மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சான்வே மேகனா நடிக்கவுள்ளார்.
சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்க, ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மணிகண்டன் ஜோடியாக சான்வே மேகனா நடிக்கிறார்.
பிரசன்னா பாலசந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி நடித்து, ராஜேஷ்வர் காளிசாமியுடன் இணைந்து கதை எழுதியுள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தன்மானத்துக்காகவும் தனது குடும்ப நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே மையக்கரு.
கோவை மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

