விமானத்தில் பயணம் செய்தபோது விமானப் பணிப்பெண்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் விஷால்.
ஹரி இயக்கியுள்ள ‘ரத்னம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஷால், அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்க்க லண்டன், அஜர்பைஜான், மால்டா ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய விஷாலுக்கு விமானப் பணிப்பெண்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஷால், “துபாய் வழியாக இந்தியா திரும்பும் போது விமான பணிப்பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்துக்கு நன்றி. காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம் ஆகியோர் எனது நாளை உற்சாகமானதாக மாற்றினார்கள். எனக்காக வாழ்த்துக்குறிப்பு எழுதுவதற்கும் சாக்லெட் கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.

