இயக்குநர் அட்லி தெலுங்கில் அவர் இயக்கப்போகும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.
ஷாரூக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்த தினமான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்த சமந்தா இந்த தெலுங்குப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மற்றொரு நாயகியும் நடிக்க இருப்பதாகவும் அதற்கு பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

