தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நயன்தாரா

தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நயன்தாரா

1 mins read
c9ac62f8-b660-4a70-af07-6814c542e40a
நயன்தாரா. - படம்: ஊடகம்

நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி இருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரிஷா பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ படங்களில் நடித்த பிறகு ஆறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் . அதோடு, ரூ.7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர் புதிய படங்களில் நடிப்பதற்கு தன்னுடைய சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியிருக்கிறார். இப்படி திரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதை அடுத்து நயன்தாராவும் புதிய படங்களில் நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படம் வெற்றி பெற்றபோதும் தமிழில் நயன்தாரா நடித்த ‘இறைவன்’, ‘அன்னபூரணி’ போன்ற படங்கள் தோல்வி அடைந்தன. அதையடுத்து ‘மண்ணாங்கட்டி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடுதிப்பென்று ரூ.12 கோடியாக சம்பளத்தை அவர் உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்