தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசதி பெருகியும் பழக்கத்தை கைவிடாத நடிகர்கள்

2 mins read
55c821df-1bb8-4f07-80ff-58ae5bcb6a2b
சிரஞ்சீவி. - படம்: ஊடகம்

வசதி வந்த பின்னரும் இன்னும் மாற்றிக் கொள்ளாத நடுத்தர வர்க்கத்து குணாதிசயங்கள் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்விக்கு சிரஞ்சீவியும் விஜய் தேவரகொண்டாவும் பதிலளித்துள்ளனர்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவியும் விஜய் தேவரகொண்டாவும் பங்கேற்றனர்.

அந்த நிகழ்வில் “வசதி வந்த பின்னரும் இன்னும் மாற்றிக் கொள்ளாத நடுத்தர வர்க்கத்து குணாதிசயங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முதலில் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “இப்போதும் நான் குளிக்கும்போது ‌ஷாம்பூ காலியாகிவிட்டால் அதில் கொஞ்சம் நீரை ஊற்றி குலுக்கி ஓரிரு நாள்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

சிரஞ்சீவி, “எனக்கும் இதுபோன்ற பழக்கம் உள்ளது. ‌ நான் பயன்படுத்தும் சோப் இறுதியில் சிறு சிறு துண்டுகளாக ஆனாலும் அவற்றைத் தூக்கி எறியாமல் ஒன்றாகச் சேர்த்து மீண்டும் ஓரிரு நாள்களுக்கு பயன்படுத்துவேன். என்னுடைய வீட்டில் மின்சார செலவு பற்றி கவலைப்படாமல் செயல்படுவார்கள். அந்த வகையில் என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் யாரும் இல்லையென்றால் மின்சார விளக்கு பொத்தானைத் துண்டித்துவிட்டுத்தான் வருவேன். அது என்னுடைய பழக்கமாகிவிட்டது,” என்றார்.

மற்றோரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா “வசதி வந்த பின்னரும் இன்னும் மாற்றிக் கொள்ளாத நடுத்தர வர்க்கத்து குணாதிசயங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முதலில் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “இப்போதும் நான் குளிக்கும்போது ‌ஷாம்பூ காலியாகிவிட்டால் அதில் கொஞ்சம் நீரை ஊற்றி குலுக்கி ஓரிரு நாள்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி