நடிகை அபர்ணா தாசுக்குத் திருமணம்

1 mins read
903851e3-b39c-443b-b723-673614f69c00
‘டாடா’ படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அபர்ணா. - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் அபர்ணா தாசும் ஒருவர். அவர் மலையாளத்தில் அறிமுகமாகி பிறகு தமிழில் தடம்பதித்து வருகிறார்.

‘டாடா’ படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் அபர்ணாவுக்கு திருமணமாக இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா திருமணம் செய்ய இருக்கிறார்.

இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

தீபக் பரம்போல் - அபர்ணாவுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. அவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்