தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாலிவுட் படத்தில் ‌ஷ்ருதி ஹாசன்

1 mins read
f70deb9c-8efa-42f4-b613-acb9a9d1a9e3
ஸ்ருதி ஹாசன். - படம்: ஊடகம்

பிரபல நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ‌ஷ்ருதி ஹாசன். 2008ஆம் ஆண்டு முதல் இந்திய சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் அனைத்துலகப் படம், ‘சென்னை ஸ்டோரி’. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.

இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ‌ஷ்ருதி ஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பில் ‌ஷ்ருதி தற்போது இணைந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்