தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோடியாக உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா - சூர்யா

1 mins read
0732b262-4aa8-4614-bb37-bd1c9bfa2790
சூர்யா -ஜோதிகா ஜோடி ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்கின்றனர். - படம்: சமூக ஊடகம்

சூர்யா -ஜோதிகா ஜோடி ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்யும் காணொளி தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

இருவரும் உடற்பயிற்சி நிலையத்தில் தீவிர உடற்பயிற்சி செய்வதைப் பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் மாதவன், ‌ஷில்பா ‌ஷெட்டி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜோதிகா சில இந்தி படங்களில் நடிக்க உள்ளார். சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.

இருவரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பயிற்சி செய்து வருகின்றனர்.

1999ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தார். அதன் பின்னர் அவர்கள் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2006ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்