விக்ரமுடன் இணையும் துஷாரா விஜயன்

விக்ரமுடன் இணையும் துஷாரா விஜயன்

1 mins read
6c8b430d-11de-4d20-8a05-d5e52a8c119b
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் துஷாரா விஜயன். - படம்: சமூக ஊடகம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் துஷாரா விஜயன்.

தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் தற்போது விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சியான் 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குநர் எஸ். யு. அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை இயக்கிய சிதம்பரம், விக்ரமுடன் கூட்டணி சேருகிறார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடிந்த பின் விக்ரம் படத்தை அவர் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இவ்வாண்டு  விக்ரம் சுவாரசியமான பல படங்களில் நடித்து வருவதால் இது அவருக்கு முக்கியமான ஆண்டு. தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார்.

சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்