ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது: போனி கபூர்

1 mins read
51c17669-50af-4cd5-ba21-1fa6ef24d08d
ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். - படம்: சமூக ஊடகம்

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்கவும் மாட்டேன் என்று நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியுள்ளார்.

அண்மையில் போனி கபூரிடம் ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

“ஸ்ரீதேவி பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது,” என்று போனி கபூர் பதிலளித்தார்.

“ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால்தான் நான் ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கினேன். ஸ்ரீதேவி வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக்கூடியவர்,” என்று போனி கபூர் நினைவுகூர்ந்தார்.

ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் சினிமாத் துறையில் கால்பதித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்