ஆறு ஆண்டுகள் பேசாமல் இருந்த ஜி.வி., தனுஷ்

1 mins read
3ee0119e-8a61-4f41-8fc4-d68d5e534084
தனுஷுடன் ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

நடிகர் தனுஷுக்கும் தனக்கும் இருக்கும் நட்பு சினிமாவைத் தாண்டிய ஒன்று என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நெருக்கமான நண்பர்கள் என்றால் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அப்படிப்பட்ட சில காரணங்களால்தான் எனக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகள் பேசாமல் இருந்தோம்.

“இப்போது எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிட்டதால் பழையபடி இருவரும் நண்பர்களாக உள்ளோம்,” என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்