பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் என்றாலும் பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது என்கிறார் இயக்குநர் ஹரி.
விஷால் நடிப்பில் இவர் இயக்கியுள்ள ‘ரத்னம்’ படம் வரும் 26ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் படத்துக்கான விளம்பரப் பணிகள் தொடங்கி உள்ளதாக ஹரி தெரிவித்துள்ளார்.
“நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் நாற்பது விழுக்காட்டினர் மட்டுமே நல்லவர்கள். மீதமுள்ள அனைவரும் கெட்டவர்கள் என்பது என்னுடைய கருத்து. நல்லவர்களைக் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன்தான் எனது ‘ரத்னம்’.
“பிறருடைய வலியைப் போக்கும் இத்தகைய கதாநாயகர்களைத் திரையில் மட்டுமே பார்க்க முடியும். ‘சாமி’, ‘சிங்கம்’ ஆகிய படங்களில் எந்த அளவுக்கு சண்டைக்காட்சிகளைப் பார்த்து ரசித்தீர்களோ அதுபோன்ற விறுவிறுப்பான காட்சிகளை ‘ரத்னம்’ படத்திலும் எதிர்பார்க்கலாம்,” என்கிறார் இயக்குநர் ஹரி.

