தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகரிக்கும் மறுவெளியீடுகள்: பட்டியலில் இணையும் ‘பையா’

1 mins read
1ab3a15f-5ee5-4f86-a8e5-1ac0f3df817a
பையா படத்தில் கார்த்தி, தமன்னா. - படம்: ஊடகம்

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மறுவெளியீடு செய்வதில் கோடம்பாக்கத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கார்த்தி, தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘பையா’ படமும் விரைவில் திரை காண உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வசூலைக் குவித்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

யுவன் சங்கர் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இந்நிலையில் இப்படம் மறுவெளியீடு காண இருப்பதாக வெளியான தகவல் கார்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்